
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளரான பதிரனா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட் சாய்த்து வெற்றிக்கு வித்திட்டார். இந்த நிலையில் அவர் இன்று விளையாடாதது சிஎஸ்கேவுக்கு பின்னடைவாகும்.