இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டேவிட் ஜான்சன் இன்று காலமானார். கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசிகெரே பகுதியை சேர்ந்த இவர் சமீப காலமாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 12.30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. இந்தியாவிற்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார். இவருடைய மறைவுக்கு கிரிக்கெட் மற்றும் பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.