இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட் (71) காலமானார்.

கடந்த சில வருடங்களாக ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கெய்க்வாட் இலண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கெய்க்வாட் உயிரிழந்தார்.

கெய்க்வாட் 1975 – 1987 க்கு இடையில் இந்தியாவுக்காக 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக 2 முறை இருந்துள்ளார். 1982-83ல் பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில் 201 ரன்கள் எடுத்தார், அங்கு அவர் நிதானமாக 671 நிமிடங்கள் பேட்டிங் செய்தார்.  பின்னர் முதல்தர கிரிக்கெட்டில் மிக மெதுவாக இரட்டை சதம் அடித்தார்.

ஜமைக்காவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளரான மைக்கேல் ஹோல்டிங் போன்ற பவுலர்களின் பந்துகளை பறக்கவிட்டு 81 ரன்கள் எடுத்தார். அப்போதைய காலகட்டத்தில் ஹெல்மெட் மற்றும் பவுன்சர்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லாத சமயத்தில் இது பெரிய சாதனையாகும்.

அண்மையில் அவருடைய மருத்துவ செலவிற்காக. பிசிசிஐ 1கோடி ரூபாய் நிதியுதவி செய்திருந்தது . கெய்க்வாட் மறைவிற்கு பிசிசிய செயலாளர் ஜெயஸ்ஷா மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும்  இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

“>