மும்பையில் கடந்த 28 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமான ராணா என்பவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். இந்நிலையில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசு அமெரிக்காவிற்கு கோரிக்கை அளித்தது.

இந்தக் கோரிக்கையை எதிர்த்து பயங்கரவாதி ராணா அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் அமெரிக்கா இந்தியா இடையிலான ஒப்படைப்பு ஒப்பந்தம் ராணாவை நாடு கடத்த அனுமதிக்கிறது. எனவே ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என்று மேல்முறையீட்டு கோர்ட் கடந்த 18 ஆம் தேதி அறிவித்தது