இன்றைய காலகட்டத்தில் சமூகவலைதளத்தில் ஏதேனும் ஒரு சம்பவம் காணொளியாக வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகும். அவற்றில் பல விதங்கள் உள்ளது. சிலவை கண்டனங்களை பெறும், சிலவை பாராட்டுகளை பெறும், சிலவை ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

அதேபோன்று இந்த காணொளி பார்ப்போருக்கு விடாமுயற்சி வெற்றியை கொடுக்கும் என்று உணர்த்தி உள்ளது. இந்த காணொளியில் தாய் வாத்து ஒன்று நீரோடையை கடந்து செல்ல அதை பின்தொடர்ந்து குஞ்சு வாத்துக்கள் செல்கிறது. அதில் ஒரு குஞ்சு மட்டும் நீரோடையில் விழுந்து தத்தளிக்கிறது.

பலமுறை முயற்சித்தும் அதனால் பாறையின் மீது ஏற முடியவில்லை. ஆனாலும் தனது முயற்சியை கைவிடாது தொடர்ந்து முயற்சி செய்து இறுதியாக பாறையின் மீது ஏறி தன் தாயை பின்தொடர்ந்து சென்றது. இந்த காணொளியை பார்த்த நெட்டிசன்கள் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.