உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக வைத்தியசாலையில் கடந்த வாரம் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த வைத்தியர்கள் மூச்சுக்குழாயில் நாணயம் ஒன்று சிக்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டாம் தேதி கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை மூலமாக மூச்சுக் குழாயில் இருந்த நாணயத்தை வெற்றிகரமாக அகற்றி உள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த நபர் 32 வயதில் நாணயத்தை வாயில் வைத்து உறங்கிய போது அதை விழுங்கியுள்ளார். பிறகு அவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. கடந்த வாரம் மூச்சுத் திணறல் அதிகரித்ததால் வைத்தியசாலைக்கு சென்ற அவர் நாணயத்தை அகற்றிய பிறகு தற்போது நலமுடன் உள்ளார்