போஸ்ட் ஆபீஸில் சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய சேமிப்பு திட்டத்தில் முதலீட்டு தொகை முன்கூட்டியே திருப்பி எடுப்பதற்கு பல புதிய கட்டுப்பாட்டுகளையும் விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில் முன்கூட்டியே பணம் எடுக்க நினைத்தால் இனி புதிய விதிமுறை என்ன? ஒவ்வொரு வருடத்திற்கும் எவ்வளவு பணம் எடுக்க வேண்டும்? என்பது குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. அதன்படி சீனியர் சிட்டிசன்கள் முதலீட்டை ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்க விரும்பினால் ஒரு சதவீதம் அபராத தொகை முதலீடு தொகையில் இருந்து வசூலிக்கப்படும். ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கான வைப்பு தொகைக்கான காலமாக நிர்ணயம் செய்திருந்து டெபாசிட் செய்த தேதியில் இருந்து ஆறு மாதம் முடிந்த பிறகு மற்றும் ஒரு வருடம் முடிவுக்குள் முன்கூட்டியே பணத்தை திரும்ப பெற்றால் டெபாசிட் காலத்திற்கான வட்டி சாதாரண சேமிப்பு கணக்கிற்கான வட்டியாக மாற்றப்படும்.

முடிந்த பிறகு முன்கூட்டியே பணத்தை திரும்ப பெற்றால் டெபாசிட் காலத்திற்கான வட்டி முதலீட்டு வட்டியில் இருந்து சுமார் 2 சதவீதம் கழிக்கப்பட்டு எவ்வளவு மாதங்கள் முதலீடு செய்தீர்களோ அந்த மாதத்திற்கான வட்டி மட்டும் கணக்கிடப்பட்டு கொடுக்கப்படும். ஐந்து வருட கால முதலீட்டில் நான்கு வருடம் முடிந்த பிறகு முன்கூட்டியே பணத்தை திரும்ப பெற்றால் டெபாசிட் காலத்திற்கான வட்டி சாதாரண போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கான வட்டியாக மாற்றப்படும். எந்த ஒரு முதலீட்டையும் ஆறு மாதம் முடிவதற்கு முன்னால் முன்கூட்டியே பணத்தை திரும்ப பெற முடியாது. மேலும் உங்களுடைய மெச்சூரிட்டி காலத்திற்கு முன்பாக பணத்தை திரும்பி பெற நினைத்தால் அதற்கு வட்டி மாற்றம் மற்றும் அபராதம் விதிக்கப்படும்.