
ஆந்திர பிரதேஷ் காக்கிநாடா பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு மூளையில் உள்ள கட்டியை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தது ஆனால் அப்போது திடீரென நோயாளிக்கு நினைவு திரும்பியுள்ளது.
சிகிச்சையும் நடந்து கொண்டிருந்ததால் நினைவு திரும்பிய நோயாளிக்கு அவருக்கு பிடித்தமான படத்தை மருத்துவர்கள் போட்டு கொடுத்துள்ளனர். அதன்படி ஜூனியர் என்டிஆர் நடித்த ஆதுர்ஷ் என்ற படத்தை ஸ்மார்ட் போனில் போட்டு கொடுத்து நோயாளியை பார்க்கச் செய்துவிட்டு மருத்துவர்கள் மூளையிலிருந்து கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இது அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.