
தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் இருக்கும் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுடெல்லி சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி மாற்றும் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. இங்கு கடந்த 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் மொத்தம் 60.42 சதவீத வாக்குகள் பதிவானது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. டெல்லியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 36 தொகுதிகளை வெல்ல வேண்டும்.
இந்நிலையில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகிக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்று அசைக்க முடியாத சக்தியாக உருவான ஆம் ஆத்மி இந்த முறை பின்னடைவை சந்தித்துள்ளது.இதற்குக் காரணம் மதுபான கொள்கை ஊழல் முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டது காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஊழல் வழக்குகளில் ஆம் ஆத்மி சிக்கியது மற்றும் யமுனை நதியை தூய்மையாக வைக்க தவறியது போன்றவைகளும் சருக்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் டெல்லியில் கிட்டத்தட்ட 27 வருடங்களுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைக்க போவது உறுதியாகி வரும் நிலையில் அவர்களின் வெற்றிக்கு மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று கூறியது பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு 12 லட்சம் வரை வரி விலக்கு அளித்தது போன்றவைகள் தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.