
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டல் நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒரு சில ரயில்களில் பயணிகளுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிலர் ரயில் கதவுகளை மூடவிடாமல் தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால் 18604251515 என்ற வாடிக்கையாளர் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.