நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே திருமணிமுத்தாறு வாய்க்கால் வழியே காவிரி கூட்டு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த குழாய் துருப்பிடித்து உடைப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் அதிக அளவு குடிநீர் வெளியாகி வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது . இந்த நிலையில் தமிழ்நாடு தமிழ்நாடு குடிநீர் வாரியத்தை கண்டித்து மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.