பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட நிலையில் நேற்று நாடு திரும்பினார். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட போது இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார். அப்போது மெலோனி  பிரதமர் மோடியுடன் சேர்ந்து செல்பி எடுத்துக்கொண்டார்.

மெலோனி  செல்பி எடுக்கும்போது பின்னால் நின்று கொண்டிருந்த பிரதமர் மோடி சிரித்தவாறு கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவை இத்தாலி பிரதமர் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அந்த வீடியோவை பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இத்தாலி மற்றும் இந்தியா நட்புறவு நீண்ட நாள் நீடிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.