ஆந்திர மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ஆந்திர மாநிலம் அனாகப் பள்ளி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடன நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடன கலைஞர் நிகழ்ச்சி மேடையில் வைத்து கோழியை உயிருடன் கடித்துக் கொன்றார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து விலங்குகள் நல அமைப்பான பீட்டா, கோழியை கடித்துக் கொண்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து நடன கலைஞர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.