
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு மேட்ரிமோனி தளத்தில் இந்து போல தன்னை பாவித்து ஒரு நபர் பெண்ணை பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு தனியார் மேட்ரிமோனி தளத்தில் 37 வயது பெண் ஒருவர் வரன் தேடி பதிவு செய்திருந்தார். இதே வலைதளத்தில் முகமது உசைன் என்பவர் தன்னை ஒரு இந்து போல் பாவித்து பதிவு செய்துள்ளார். இவர் அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார்.
இந்நிலையில் திருமணம் பற்றி ஆலோசிக்கலாம் என்று கூறி முகமது உசேன் அந்த பெண்ணை தனியாக வரவழைத்தார். அப்போது அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அவர் அதன் பின்பு திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரியின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முகமது உசேனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.