அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், இது தொடர்பான விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம் எனத் தெரிவித்துள்ளது