
வருமான வரி சட்ட விதிகளின்படி நிரந்தர கணக்கு எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். வருமான வரித்துறை கடந்த மாதம் வெளியிட்ட சுற்றறிக்கையில், வரி செலுத்துவோர் தங்களுடன் பான் கார்டை ஆதாருடன் மே 31ஆம் தேதிக்குள் இணைத்தால் டிடிஎஸ் வரி வசூலில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என தெரிவித்தது.
இந்த நிலையில் அந்த அறிவிப்பை மீண்டும் நினைவுப்படுத்தி அதிக விகிதத்தில் வரி விதிக்கப்படுவதை தவிர்க்க பான் கார்டை மே 31ஆம் தேதிக்கு முன்பு ஆதாருடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும் அபராதங்களை தவிர்க்க மே 31ஆம் தேதிக்கு நிதி பரிவர்த்தனை அறிக்கையை தாக்கல் செய்ய வங்கிகள் மற்றும் அந்நிய செலவாணி முகவர்கள் உள்ளிட்ட நிறுவனங்களை வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.