மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக வங்கதேசம் டாக்கா விமான நிலையத்தில் 106 தமிழக மாணவர்கள் தமிழகம் வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு காரணமாக போராட்டம் நடைபெற்று வருவதால் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலேட் நகரில் படிக்கும் 106 தமிழக மாணவர்கள் சென்னை வர இருந்த நிலையில் மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக விமான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டதால் 106 மாணவர்களும் டாக்கா விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

தற்போது வங்கதேச நாட்டில் போராட்டம் வெடித்திருப்பதால் விமான நிலையத்தில் 106 மாணவர்களும் தங்கி உள்ளனர். அங்கு நடைபெற்ற போராட்டத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.