
எகிப்தின் கிஸா பிரமிடு உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகும். சுமார் 450 அடி உயரமுள்ள இந்த பிரமிடின் உச்சியை பார்ப்பது பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதன் உச்சியில் ஒரு நாய் ஏறி சுற்றிய காட்சி சமீபத்தில் வைரலாகியுள்ளது. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதோடு, இதுபோன்ற அபூர்வ நிகழ்வுகள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை பெறுகின்றன.
இந்த அரிய காட்சியை ஒரு பலூனில் பறந்தபோது அலெக்ஸ் லாங்கால் என்பவர் திடீரென கண்டார். தன்னுடைய பயணத்தை செல்பி எடுத்துக்கொண்டபோது, தற்செயலாக அந்த நாய் பிரமிடின் உச்சியில் சுற்றிய காட்சியையும் பதிவு செய்தார். சோஷியல் மீடியாவில் வைரலான அந்த வீடியோ இது சில மணி நேரங்களில் 5 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகியுள்ளது. பறவைகளை துரத்தி சென்ற போது நாய் பிரமீடின் உச்சியை அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.