அஹ்மதாபாத் நகரத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த 450-க்கும் மேற்பட்ட வெளிநாட்டை சேர்ந்த நபர்கள் பெரும்பாலும் பங்களாதேஷை சேர்ந்தவர்கள். இவர்கள் இன்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட கூட்டு சோதனையின் போது, ஆவணங்கள் இல்லாமல் குடியேறியிருந்தவர்களை போலீசார் அடையாளம் கண்டறிந்து, கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தினர்.

உரிய ஆவணங்கள் இல்லாதவர்களை நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று குற்றப்பிரிவு துணை ஆணையர் அஜித் ராஜியன் தெரிவித்தார்.

தற்போது கைது செய்யப்பட்டவர்கள் கன்கரியா கால்பந்து மைதானத்தில் தற்காலிகமாக தங்க  வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு குடியேற்ற மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இவ்விதமான சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.