தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் 8 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் மாநாட்டில் பங்கு பெற்றதாக கூறப்படுகிறது விஜய் அவர்கள் ஒரு நடிகர் அதனால் அவரை காண எவ்வளவு கூட்டம் வந்தது அதிசயம் அல்ல என்பது உள்ளிட்ட கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இதுதான் அரசியல் வரலாற்றிலேயே அதிகமான கூட்டம் கூடிய மாநாடு எனவும் கூறி வருகின்றனர்.

ஆனால் இதற்கு முன்பாக கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கூட்டிய கூட்டம் தான் இதுவரை தெற்கு ஆசிய கண்டத்திலேயே இதுவரை கூடிய அதிகபட்ச மாநாட்டுக்கான கூட்டமாகும். பந்தலில் போடப்பட்ட இருக்கைகள் முழுவதும் நிரம்பி மாநாடு நடைபெறும் இடத்திற்கு அப்பால் பல கிலோ மீட்டர்களுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

தகவல்களின்படி கிட்டத்தட்ட 25 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கேப்டனின் ரசிகர்கள் அந்த இடம் முழுவதும் கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய காலகட்டத்தில் இத்தனை சமூக வலைதளங்கள்  இருந்தாலும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் சேர்ந்தாலும் கூட அப்படி ஒரு கூட்டத்தை மீண்டும் கூட்ட முடியாது என கேப்டனின் ரசிகர்கள் அந்த வீடியோ குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.