10 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன்- சத்தியபாமா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது படிப்பு செலவுக்காக வைத்திருந்த 10 லட்சம் பணத்தை வட்டி தருவதாக கூறி முன்னாள் ராணுவ வீரர் பெருமாள் சாமி என்பவர் கடனாக வாங்கிச் சென்றுள்ளார்.

அவர் வட்டி தராததுடன் முதலையும் திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மகள்களின் படிப்பு செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த சத்தியபாமா குடும்பத்துடன் முன்னாள் ராணுவ வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் பணத்தை தர மறுத்ததுடன் வீட்டை விட்டு வெளியேற்றி கேட்டை பூட்டியுள்ளார். இதனால் சத்தியபாமா கேட்டின் முன்பாக குடும்பத்துடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.