இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக போலி அழைப்புகள் மற்றும் போலி குறுஞ்செய்திகள் மூலமாக மோசடிகள் அதிகரித்து விட்டன. செல்போனுக்கு தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளில் பேசும் பெண்கள் முதலீடு மற்றும் ஓடிபி குறித்து பேசி மோசடி செய்வது அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் வாடிக்கையாளர்களை தேவையில்லாமல் தொந்தரவு செய்வதை தடுக்க TRAI பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வங்கி மற்றும் நிதி நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட TRAI, மோசடி அழைப்புகளை தவிர்க்க ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்று தெரிவித்துள்ளது. மேலும் மோசடி அழைப்புகளில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பது குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை நிதி நிறுவனங்களுக்கு டிராய் வழங்கியுள்ளது.