
மோடியின் துணிச்சலான முடிவால்தான் இந்தியாவில் பெட்ரோல் விலை உயரவில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாதென இந்தியாவுக்கு நிர்பந்தம் தரப்பட்டதாகவும், ஆனால் இதை மோடி கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார். நிர்பந்தத்துக்கு கட்டுப்பட்டு இருந்தால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.20 உயர்ந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.