
மோடியின் பரமாத்மா அதானிக்கும், அம்பானிக்கும் சாதகமான முடிவுகளை எடுக்குமாறு கூறுகிறது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். வயநாட்டில் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி ,தாயின் மறைவுக்குப் பிறகு தான் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை உணர்ந்ததாக பிரதமர் மோடி கூறினார்.
நான் எந்த முடிவும் எடுப்பதில்லை என்னை இந்த பூமிக்கு அனுப்பிய பரமாத்மாவே அனைத்து முடிவுகளையும் எடுப்பதாக கூறினார். அவர் கூறிய பரமாத்மா விசித்திரமான பரமாத்மா. அனைத்து முடிவுகளையும் அதானிக்கும் அம்பானிக்கும் சாதகமாகவே எடுக்குமாறு மோடியின் பரமாத்மா கூறுகிறது என்று பேசி உள்ளார்.