
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது வேட்டையன் மற்றும் கூலி போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினி படப்பிடிப்புக்கு மத்தியில் சமீபத்தில் இமயமலைக்கு சென்று வந்தார். அதன் பிறகு அவர் டெல்லியின் நடைபெறும் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது.
இந்நிலையில் இன்று காலை பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மேலும் அப்போது நடிகர் ரஜினிகாந்த் நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்பது மிகப்பெரிய சாதனை என்று புகழாரம் சூட்டினார்.