சென்னை மாவட்டத்தில் உள்ள போரூர் சக்தி நகரில் சாப்ட்வேர் இன்ஜினியரான தீபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ராமாபுரத்தில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த கிரேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதனால் படுகாயமடைந்த தீபக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே தீபக் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கிரேன் டிரைவரான தினேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்