
தமிழகத்தில் சமீப காலங்களாக மோட்டார் வாகனங்கள் தீ பிடித்து எரியும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக கார், பைக் போன்ற வாகனங்கள் தீப்பிடித்து எரிவது தொடர்பாக போக்குவரத்து ஆணையர் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதாவது அங்கீகரிக்கப்படாத மற்றும் தகுதி இல்லாத நிறுவனங்களால் சிஎன்ஜி அல்லது எல்பிஜி மாற்றங்கள் செய்வதால் தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உரிய அனுமதி பெற்ற பிறகு தான் வாகனங்களில் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி போன்றவைகளை மாற்ற வேண்டும். மேலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உரிய அனுமதி பெறாமல் வாகனங்களில் அதை மாற்றுவது குற்றம் என்றும் வாகன உரிமையாளர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.