அமுல் நிறுவனத்தின் மோர் பாக்கெட்டில் புழு இருந் வீடியோவை கஜேந்திர யாதவ் என்ற வாடிக்கையாளர் எக்ஸ்  பக்கத்தில் பதிவிட்டு அந்த நிறுவனத்தை விமர்சித்துள்ளார். அதில் அமுல் இணையதளத்தில் பொருட்கள் வாங்குவதை நிறுத்துங்கள் . அமுல், உங்களின் அதிக புரதச்சத்தை நிறைந்த மோருடன் சேர்த்து எங்களுக்கு புழுவையும் அனுப்பி உள்ளீர்கள். நாங்கள் வாங்கிய மோரில் புழுக்கள் இருப்பதை கண்டு எனது ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தவே இதை  எழுதுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து மற்றொரு x பதிவில், நான் அமுல் நிறுவனத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன். அத்தோடு இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் இணைத்து அவர்களின் சோதனைக்காக இன்றுக்குள் சேகரிக்கும்படி கேட்டுக் கொண்டேன் .நான் எந்த பொய்யான குற்றச்சாட்டையும் சொல்லவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த விவகாரம் குறித்து குஜராத்தில் உள்ள அமுல் தலைமை அலுவலகத்தில் இருந்து இவருக்கு அழைப்பு வந்ததாகவும் நடந்த இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.