ராணிப்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தி திணிப்பிற்கு எதிராக திமுக போராட்டம் நடத்தவில்லை, நாடகம் தான் போட்டுக் கொண்டிருக்கிறது. 60 வருடமாக நாடகம் தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னை மீறி முடிந்தால் இந்தி மொழியை திணித்துக் காட்டுங்கள். நாம் தமிழர் கட்சியில் நிர்வாகிகள் நீடிப்பதும் வெளியேறுவதும் அவர்களுடைய சொந்த விருப்பம். இது ஒரு ஜனநாயக இயக்கம்.

விரும்பியவர்கள் கட்சிக்கு வருவார்கள் போவார்கள், இது பற்றி எல்லாம் பேசிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது ஒரு செய்தியாக ஒவ்வொரு முறையும் கேட்கிறீர்கள். நானும் பதில் சொல்ல வேண்டியுள்ளது. அதை விட்டு தள்ளுங்கள், இது என்னுடைய கட்சி பிரச்சனை. கொள்கை மீது விருப்பமுள்ளவர்கள் கட்சியில் பயணிப்பார்கள். வேறு ஒரு காரணம் இருக்கிறது என்று நினைத்தால் வெளியேறுவார்கள். யாருடைய கையிலும் காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் கிடையாது, முரண்பாடு உள்ளவர்கள் வெளியேறுகிறார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சி நிர்வாகிகள் விலகி வருவது குறிப்பிடத்தக்கது.