
இங்கிலாந்துக்கு எதிராக ஐம்பதாவது ஒரு நாள் போட்டியில் களம் கண்ட சுப்மன் கில் 12 பந்துகளில் 14 பவுண்டரிகள் மூன்று சிக்ஸர்ர்கள் விளாசி 112 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக 50 நாள் போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 2500 ரன்கள் அதிகமாக கடந்த முதல் வீரராகவும் மாறியுள்ளார் .தன்னுடைய ஐம்பதாவது ODI போட்டியில் விளையாடி சதம் அடித்த இவர் ஐம்பதாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார்.
அடுத்ததாக அகமதாபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஏழாவது ஒரு நாள் சதம் அடித்து மற்றொரு சாதனையும் படைத்தார். அதாவது ஒரே ஸ்டேடியத்தில் ஒருநாள், ODI, டி20 என்ற மூன்று வடிவத்திலும் சதம் அடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார். முன்னதாக பாபர் அசாம், டூபிளெசிஸ், டிகாக், டேவிட் வார்னர் மட்டுமே சாதனை புடைத்திருந்த நிலையில் முதல் இந்திய வீரராக சுப்மன் கில் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளில் தொடரில் விளையாடிய சுப்மன் கில் மூன்று போட்டிகளிலும் அரை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலமாக மூன்று போட்டிகள் கொண்ட இரண்டு தரப்பு இந்திய அணிக்காக அனைத்து போட்டிகளிலும் அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி, ஸ்ரீகாந்த் மற்றும் தோனியுடன் இணைந்துள்ளார் சுப்மன் கில்.