நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். பின்பு நாக சைதன்யா சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமந்தா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருக்கிறார். இதற்கிடையில் சமந்தா மையோ சிட்டிஸ் எனும் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

அதன் பிறகு நோயிலிருந்து குணமடைந்து மீண்டும் பிஸியாக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். சமீபத்தில் சிட்டாடல் ஹனி பனி என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது மும்பையில் தான் செட்டில் ஆகி இருக்கிறார் சமந்தா.  இதற்கிடையில் சமந்தா இயக்குனர்  நந்தினி ரெட்டி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சமந்தா தன்னுடைய திரிலாலா மூவி பிக்சர்ஸ் நிறுவனம் மூலமாக தயாரிக்க இருக்கிறார்.

தற்போது பாலிவுட் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி  நகரில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவை சுற்றி பார்த்து அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சமந்தா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்களோ இந்த புகைப்படம் எடுத்த அந்த நபர் யார்? என்று கேள்வி எழுப்ப அதற்கு சிட்னி சுற்றுலா வழிகாட்டி தான் இந்த புகைப்படங்களை எடுத்தார் என்று அதிரடியாக பதில் அளித்துள்ளார்.