தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று மற்றும் நாளை கோயம்புத்தூரில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமான மூலமாக கோவைக்கு நடிகர் விஜய் புறப்பட்ட நிலையில் தற்போது கோவை விமான நிலையத்தை வந்தடைந்தார். கோயம்புத்தூர் வந்த நடிகர் விஜய்க்கு தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதை தொடர்ந்து நடிகர் விஜய் வாகனத்தில் மாநாடு நடைபெறும் இடத்திற்கு கிளம்பியுள்ளார்.

இந்நிலையில் விமான நிலையத்திலிருந்து நடிகர் விஜய் திறந்த வெளி வாகனத்தில் புறப்பட்டுள்ளார். அவர் ரோடு ஷோ நடத்தியவாரே வாகனத்தில் மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்லும் நிலையில் செல்லும் இடமெல்லாம் தொண்டர்களின் கூட்டம் கடல் அலை போல நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் வாகனத்தில் தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி மகிழ்ச்சியாக செல்லும் நிலையில் திடீரென ரசிகர் ஒருவர் வாகனத்தின் மீது ஏறி வந்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

அவர் விஜயை பார்த்த உற்சாகத்தில் வாகனத்தின் மீது ஏறி நின்று கும்பிடு போட்டபடியே நின்றார். ஒரு நிமிடம் விஜய் ஆடிப் போய்விட்டார். உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி அந்த ரசிகரை அங்கிருந்து பத்திரமாக கீழே இறக்கி விட்டார். இருப்பினும் விஜய் அந்த இடத்தில் கோபப்படவே இல்லை அந்த ரசிகரை பார்த்து மகிழ்ச்சியாகவே வணக்கம் வைத்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.