ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை அடுத்த சின்னகீரமங்கலத்தில் ஆரோக்கிய அமலதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரெக்சன் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவனுக்கு 12 வயது ஆகிறது. இந்த நிலையில் பள்ளி சென்றபோது அடையாளம் தெரியாத இரண்டு பேர் தன்னை காரில் ஏற்றி சென்றதாக சிறுவன் கூறியுள்ளார்.

அதன் பிறகு ஆதிரெத்திநேஸ்வரர் கோவில் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக அவர்கள் காரை நிறுத்திய போது தான் அவர்களிடமிருந்து தப்பித்து திருவாடானை பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து அரசு பேருந்து மூலம் வீட்டிற்கு வந்ததாக சிறுவன் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆரோக்கிய அமலதாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.