
மதுரை முத்துவின் காமெடி பெறும் வரவேற்பு பெற்ற ஒன்றாக இருக்கிறது. இவருக்கு லேகா என்பவரோடு காதல் திருமணம் நடந்த நிலையில் அவர் விபத்தில் ஒன்று சிக்கி மரணம் அடைந்தார். இந்த தம்பதிகளுக்கு ரெண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்காக திருமணம் செய்து கொண்டார் மதுரை முத்து. முதல் மனைவி லேகாவின் தோழியான மருத்துவர் நீது என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் நீது எதிர்மறையான சில பதிவுகளை வெளியிட்டு வருகிறார். வருத்தத்தோடு அவர் இருக்கும் பல பதிவுகள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் மருத்துவமனையில் இருப்பது போன்ற பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளார் . அவர் அதில் யாரையும் முழுவதுமாக நம்ப வேண்டாம் என்றும், தான் பலருக்காக பலமுறை இறங்கி வந்திருப்பதாகவும் பலருக்காக பேசி இருப்பதாகவும் வருத்தத்தோடு கூறியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.