மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் அகாடமி கட்டும் பணி தொடங்கியுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, தலைசிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளை தமிழகத்தில் உருவாக்குவோம். திராவிட மாடல் அரசு விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். எடப்பாடி பழனிச்சாமி, திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் வைப்பது விமர்சித்து பேசினார். மக்கள் நலத்திட்டங்களுக்கு யார் பெயரை வைக்க வேண்டுமோ அவர் பெயரை தான் வைக்க வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞர் பேரை வைக்காமல் இருக்க முடியாது. எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார். நேரடி விவாதத்திற்கு அழைத்தால் நான் செல்வேன் என கூறியுள்ளார்.