
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு உதகை போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக பயணித்து அதனை யூடியூப்பில் பதிவேற்றி வந்ததன் மூலம் பிரபலமானவர் டிடிஎப் வாசன். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இவர் பைக்கில் எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு அதிக அளவில் கூட்டம் கூடி போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கம்.
இதுதொடர்பாக போலீசார் டிடிஎப் வாசனுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் உதகை சாலைகளில் பைக்கை அதிவேகத்தில் இயக்கியதாக அவரை மடக்கிப் பிடித்த புதுமந்து காவல்துறையினர் ரூ.1000 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.