அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ராஜேஷ் பருவா பஜவாடா . இவர்பதினோராம் வகுப்பு படிக்கும் அந்த மாணவர் ஒருவர் சரியாக படிக்காததன் காரணமாக அவரை அழைத்து கண்டித்துள்ளார். மேலும் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார்.  உடனே வகுப்பை விட்டு வெளியேறி அந்த மாணவர் கடையில் சென்று கத்தி ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டு சாதாரண உடையில் வகுப்பறையில் வந்து அமர்ந்துள்ளார்.

சீருடை அணியாமல் சாதாரண உடை அணிந்து உள்ளதை பார்த்த ஆசிரியர் மீண்டும் வகுப்பை  விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மாணவர் ஆசிரியர் தலையை கடுமையாக தாக்கியதுடன் தான் வாங்கி வைத்திருந்த கத்தியால் ஆசிரியர் வயிற்றில் சராமாரியாக குத்தியதில் ஆசிரியர் உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவனை கைது செய்துள்ளார்கள்.