
தமிழகத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி, சென்னை மற்றும் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம், செங்கல்பட்டு கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான MD மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான செயற்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், www.tnhealth.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் சமர்ப்பித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. செயலாளர், தேர்வு குழு, இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி இயக்குனரகம், அரும்பாக்கம், சென்னை 106 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.