
சிவகங்கை மாவட்டம் மாங்குடி பாலாற்று பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் இரவு நேரம் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி மணல் திருட்டு நடைபெற்று வந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி போலீசார் மாங்குடி பாலாறு ஆற்றுப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆனந்த கண்ணன், வெங்கடேசன் ஆகிய இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர் . இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஆனந்த கண்ணன் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் மணல் அள்ள உபயோகித்த வாகனங்களான ஜே சி பி, டிராக்டர் மற்றும் ஈச்சர் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.