பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த 21ஆம் தேதி வெளியான திரைப்படம் டிராகன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு லோகர் நடித்திருந்தார். இந்த படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போது இளைஞர்களுடைய  கிரஷாக கையடு லோகர் இந்த படத்தின் மூலமாக மாறி உள்ளார். இந்த படத்தை அடுத்து இதயம் முரளி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு படத்தின் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .

இந்த நிலையில் இவருடைய பெயரை பயன்படுத்தி x பக்கத்தில் பல கணக்குகள் போலியாக தொடங்கப்பட்டுள்ளதை பார்த்த இவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, “சோசியல் மீடியாவில் என்னுடைய இந்த எக்ஸ் கணக்கு தவிர என் பெயரில் எந்த கணக்கும் இல்லை. மற்றவை அனைத்தும் போலி கணக்குகள். அதில் வெளியாகும் செய்திகளை அதிகம் ரசிகர்கள் நம்ப வேண்டாம். நான் என்னுடைய இந்த கணக்கின் மூலமாக சரியான நேரத்தில் உங்களோடு சரியான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.