இந்தியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி தனது அற்புதமான பேட்டிங் மற்றும் தன்னம்பிக்கை மிக்க விளையாட்டுக்காகப் பெயர் பெற்றவர். ஆனால், சமீபத்தில் அவரைப் பற்றிய கவலை தரும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த வீடியோவில், காம்ப்ளி நடக்க முடியாமல் தடுமாறி, சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளைப் பிடித்துக்கொண்டு நிற்கும் காட்சி இருந்தது. இந்த வீடியோ வேகமாகப் பரவி, ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அவரது உடல்நலம் குறித்து கவலை கொள்ள வைத்தது. வீடியோவில், கம்பி தனது சமநிலையை இழக்கும் நிலையில் இருந்தார்.

அருகில் இருந்த சிலர் அவருக்கு உதவி செய்து, அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்தக் காட்சியை பகிர்ந்த ஊடகவியலாளர் நரேந்திர குப்தா, காம்ப்ளியின் உடல்நலம் குறித்து கவலை தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக காம்ப்ளி உடல்நலம் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாகவும், இதனால் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குப்தா கூறினார்.

இந்த வீடியோ குறித்து காம்ப்ளி தனது நெருங்கிய கிரிக்கெட் நண்பர்களை தொடர்பு கொண்டு தனது உடல்நலம் நன்றாக இருப்பதாக கூறினார். அவரது பள்ளித் தோழனான ரிக், முதல் தர நடுவர் மார்க்கஸ் மற்றும் கௌடோ சகோதரர்கள் ஆகியோர் அவரை தொடர்பு கொண்ட பிறகு, காம்ப்ளி , ‘நான் நன்றாக இருக்கிறேன், சமூக வலைதளங்களை நம்பாதீர்கள்’ என்று கூறினார். இதனால் அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

கவலை தரும் வீடியோ இருந்தபோதிலும், காம்ப்ளியின் நெருங்கிய நண்பர்கள் அவர் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினர். கௌடோ சகோதரர்களுடன் கிட்டத்தட்ட 5 மணி நேரம் பேசிய காம்ப்ளி தனது கிரிக்கெட் வாழ்க்கையை நினைவு கூர்ந்தார். 1990களில் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை எதிர்கொண்டது மற்றும் ஷேன் வார்னை சமாளித்தது பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். பழைய இந்தி பாடல்களைப் பாடி தனது நண்பர்களை மகிழ்வித்தார். இதிலிருந்து அவரது நகைச்சுவை உணர்வு இன்னும் இருப்பது தெளிவாகிறது.

“>