
ஐசிசி 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில் இந்தப் தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கிறது. இதில் இந்திய அணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்ததால் இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி ஏ பிரிவில் இருக்கிறது. இதில் பிப்ரவரி 20ஆம் தேதி வங்கதேசத்துடனும், பிப்ரவரி 23ஆம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2-ம் தேதி நியூசிலாந்து அணியுடனும் இந்தியா மோதுகிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி இன்று பிற்பகல் 1:30 மணியளவில் டிக்கெட் விற்பனை இந்திய நேரப்படி தொடங்குகிறது. பாகிஸ்தான் நேரப்படி 2 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. இதில் துபாயில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும் பாகிஸ்தான் நாட்டின் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மட்டுமே இன்று தொடங்கும் நிலையில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ஆயிரம் ரூபாயாகவும் இதில் பிரிமியம் டிக்கெட் விலை 1500 ரூபாயாகவும் இருக்கிறது.