
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாஸில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை -பெற்ற நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நாளை வேட்டையன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.