நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் வெளியானது ஐந்து டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களையும் பாகிஸ்தான் அணி இழந்தது. நடைபெற்ற போட்டியின் பாகிஸ்தான் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை முழுமையாகவே இழந்தது. இதனால் ஆத்திரமடைந்த வெளிநாட்டு ரசிகர்கள் சிலர் பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்தது மட்டுமல்லாமல் தேவையற்ற வார்த்தைகளாலும் கோஷமிட்டார்கள்.

இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் குஷ்தில் ஷா தடுப்பை தாண்டி உள்ளார். மேலும் ரசிகர்களையும் தாக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை தரதரவென  இழுத்துச் சென்று அங்கிருந்து வெளியேறி உள்ளார்கள். மற்ற பாதுகாவலர்களும் அந்த ரசிகர்களை வெளியேற்றியுள்ளார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.