
இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த சூழலில் பலருக்கும் பிடித்த அணியாக இருக்கும் பெங்களூர் அணியை இந்த முறை யார் தலைமை தாங்கி வழிநடத்த போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனென்றால் இதற்கு முன்பு கேட்டனாக அணியை வழிநடத்திய தென் ஆப்பிரிக்கா வீரர் Fuf Du Plessis டெல்லி அணிக்கு சென்றுள்ளார். பெங்களூர் அணிக்கு பழையபடி அனுபவம் மிக்க விராட் கோலி தான் கேப்டனாக நியமிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. தகவல் மட்டும் இன்றி ரசிகர்களுடைய எதிர்பார்ப்பும் அதுவாக தான் இருந்தது.
இந்த நிலையில் தான் நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஆர்சிபி அணியின் எட்டாவது கேப்டன் ஆவார். இந்த நிலையில் முன்னாள் வீரர் கைப் கூறியதாவது, “ரஜத் படிதார் ஆர்.சி.பி கேப்டன் ஆன பின்னணியில் கோலி இருக்கிறார் என்று கூறியுள்ளார். கோலி கேப்டன் ஆகாதது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றும், தன்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்கும் தான் கோலி கேப்டன் பொறுப்பை மறுத்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார். அணியில் எதிர்காலம் கருதி தான் பெயரை அவர் முன்மொழிந்ததாகவும் ஆனால் இது படிதாருக்கு மிகப்பெரிய சவால் என்றும் குறிப்பிட்டுள்ளார்.