திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டையை வழங்கி பேசினார்.

அவர் கூறியதாவது, திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏன் வாக்களித்தோம் என பொதுமக்கள் வருத்தப்படுகின்றனர். நாடு முழுவதும் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் தமிழக மக்களுக்கு எதிராக இருக்கிறது.

சட்டம் ஒழுங்கு தமிழகம் முழுவதும் சீர் கெட்டு இருப்பது தான் திமுகவின் பரிசு. திருப்பூரில் நசிந்து விட்ட தொழில்களை சரி செய்ய தமிழக முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் தனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என ரஜினிகாந்த் நினைக்கிறார். அவர் திமுகவை பாராட்டி பேசுகிறார்.

திமுக இடையே ரகசிய கூட்டணி உருவாகி இருப்பதால் இரண்டு கட்சிகளும் நெருங்கி வர ஆரம்பித்துவிட்டது. அமெரிக்கா செல்வதால் மு.க ஸ்டாலினுக்கு மத்திய அரசு உதவிகள் தேவைப்படுகிறது. மேலும் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமைக்கு கீழ் இருக்கும் காவல்துறை செயல்படவில்லை என பொள்ளாச்சி ஜெயராமன் பேசியுள்ளார்.