
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் கூலி. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் 38 வருடங்களுக்கு பிறகு சத்யராஜ் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் படத்தில் ஏன் இவ்வளவு காலம் ஏன் நடிக்கவில்லை என்று சத்யராஜ் பேசியிருக்கிறார். அதாவது நான் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பிறகு இரண்டு ரஜினிகாந்த் படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் என்னை அனுகினார்கள்.
அதில் ஒன்று சிவாஜி. மற்றொன்று எந்திரன். கதாபாத்திரத்தில் எனக்கு திருப்தி இல்லாததால் நடிக்க மறுத்தேன். இந்த காரணத்தை தவிர்த்து எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ரஜினிகாந்திற்கும் எனக்கும் பல ஆண்டுகளாக எதுவுமே பிரச்சினை இல்லை என்று கூறினார்.