
தமிழக முதல்வர் ஸ்டாலின் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் பேசிய வீடியோவை வெளியிட்டார். அப்போது அவர் தமிழக பெண்கள் தன்னை அப்பா, அப்பா என்று செல்லும் இடங்களில் எல்லாம் அழைப்பதாக மகிழ்ச்சியாக கூறினார். அதன் பிறகு உணவு சாப்பிடும் முறை முதல் மணிப்பூர் விவகாரம் வரை பல பிரச்சினைகள் குறித்து பேசிய அவர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜகவின் வாய்ஸ் என்று விமர்சித்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெய்லர் லுக்கில் இருக்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் ரஜினிக்கே டஃப் கொடுப்பார் போலே என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram