தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். இவர் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அவர் திரையுலகை விட்டு விலக இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்த ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக நடிகர் தாமு சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதாவது நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்தமான ஹீரோ அஜித் என்று அவர் கூறியுள்ளார். மேலும் சில காலம் நடிகர் அஜித்தின் பில்லா படத்தில் வரும் தீம் பாடலை தன்னுடைய போன் ரிங்டோன் ஆக வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.