தமிழகத்தின் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தாய்நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் திமுக மூத்த அமைச்சர்களை முதல் ரேங்க் வாங்கியும் வகுப்பறையை விட்டு வெளியேற மறுக்கும் பழைய மாணவர்கள் என்று கூறினார். குறிப்பாக அவர் அமைச்சர் துரைமுருகனை பற்றி பேசினார்‌. பின்னர் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல்கள் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் அதற்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில் ரஜினிகாந்தின் கருத்தை ஆதரிக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூத்தவர்கள் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த கருத்து திமுகவில் புயலைக் கிளப்பியுள்ளது.

அவர் இளைஞர்களுக்கு வழிவிட மூத்தவர்கள் முன் வர வேண்டும் என்று கூறியது ஒருபுறம் நல்லவிதமாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், மற்றொருபுறம் அவர் சீனியர்களை இப்படி அவமதித்து பேசுவதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி முதல்வர் ஸ்டாலின் மூத்தவர்கள் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்று கூறியதைதான் ரஜினிகாந்த் கூறியதாக கூறியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் பேச்சை உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் ரசித்ததாக கூறப்படும் நிலையில் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் விரும்பவில்லை. இதனால் அமைச்சர் துரைமுருகன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு திமுக உதயநிதி ஸ்டாலின் வசம் வரும்போது இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்றும் ம் கூறப்படுகிறது